தமிழீழ விளையாட்டு ஆணையம் பெருமையுடன் நடாத்தும்
அடிக்கல் நாயகர்கள் நினைவு வெற்றிக் கிண்ணம் – 01.06.2025
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் ஆணிவேர்களாகத் திகழும் “அடிக்கல் நாயகர்கள்” லெப்டினன்ட் சங்கர், லெப்டினன்ட் சீலன், வீரவேங்கை ஆனந்த், லெப்டினன்ட் செல்லக்கிளி, கப்டன் லாலா ரஞ்சன், லெப்டினன்ட் ராஜா, கப்டன் பண்டிதர், கப்டன் றெஜி, மேஜர் அல்பேட், கப்டன் லிங்கம், லெப்டினன்ட் கேணல் விக்டர், மேஜர் கணேஸ், லெப்டினன்ட் கேணல் பொன்னம்மான், லெப்டினன்ட் கேணல் குமரப்பா, லெப்டினன்ட் கேணல் புலேந்திரன், லெப்டினன்ட் கேணல் சந்தோசம், கேணல் கிட்டு, லெப்டினன்ட் கேணல் அப்பையா ஆகிய பதினெட்டு மாவீரர்களின் நினைவாக மாபெரும் விளையாட்டுப் போட்டியினை தமிழீழ அரசியல்துறை ஐக்கிய இராச்சியத்தின் தமிழீழ விளையாட்டு ஆணையம் தொடர்ச்சியாக இலண்டனில் முன்னெடுத்து வருகிறது.
அந்த வகையில் எதிர்வரும் 01/06/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8:00 மணி தொடக்கம் மாலை 8:00 மணிவரை ROUNDSHOW PLAYING FIELD, CROYDON, CR0 4RW எனும் திறந்தவெளி மைதானத்தில் உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டாம், மென்பந்து துடுப்பாட்டம் ஆகிய பெரும் விளையாட்டுகளுடன், சிறியவர்கள், பெரியவர்களுக்கான தமிழரின் பண்பாட்டுப் பாரம்பரிய விளையாட்டுகளும் நடைபெறவிருக்கின்றது.
அத்துடன் மைதானத்தில் சுடச்சுட பல்சுவை தமிழ் உணவுகளும், குளிர்பானங்களும் கிடைக்கும்.
கட்டணமற்ற நுழைவும், வாகனத் தரிப்பிடத்திற்கு மட்டும் £5 பவுண்சுகள் அறவிடப்படும்.
கோடை நாளில் கூடி மகிழவும், விளையாட்டில் பங்குபற்றும் வீரர்களுக்கு உற்சாகம் கொடுத்து ஊக்குவிக்கவும், தமிழ் உணவு வகைகளை உண்டு ருசிக்கவும் அனைவரையும் அன்புரிமையுடன் அழைக்கின்றோம்.
மேலதிகத் தொடர்புகளுக்கு:
நிருபன் – 0745 598 5119
ரகு – 0746 676 8880
ஒருங்கிணைப்பு:
தமிழீழ விளையாட்டு ஆணையம்
தமிழீழ அரசியல்துறை
ஐக்கிய இராச்சியம்



















































































