தமிழீழ அரசியல்துறை ஐக்கிய இராச்சியத்தின் கலைபண்பாட்டுக் கழகத்தின் ஒழுங்கமைப்பில் இலண்டன் கரோ பகுதியில் மண்டபம் நிறைந்த மக்களுடன் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வு!

கலைபண்பாட்டுக் கழகம்
தமிழீழ அரசியல்துறை
ஐக்கிய இராச்சியம்
19/01/2025

தமிழீழ அரசியல்துறை ஐக்கிய இராச்சியத்தின் கலைபண்பாட்டுக் கழகத்தின் ஒழுங்கமைப்பில் இலண்டன் கரோ பகுதியில் மண்டபம் நிறைந்த மக்களுடன் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வு!

11.01.1990 அன்று மணலாறு பகுதியில் சுகவீனம் காரணமாகச் சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் படையணியின் முதல் தளபதி மேஜர். சோதியா அவர்களின் 35ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு, மற்றும்..

16.01.1993 அன்று வங்கக் கடலில் காவியமான மூத்த தளபதி, தமிழீழத்தின் முதல் கேணல். கிட்டு அவர்கள் உட்பட பத்து வேங்கைகளின் 32ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு, மற்றும்..

2006.12.23 அன்று வீரச்சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மதியுரைஞர், அரசியல் ஆலோசகர் “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு,

ஆகிய மூன்று வீரவணக்க நிகழ்வுகளையும் இலண்டன் கரோ பகுதியில், கலைபண்பாட்டு கழகத்தால் மிகவும் நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் மண்டபம் நிறைந்த மக்களுடன், தமிழின உணர்வாளர்களுடன், தமிழீழ அரசியல்துறை உறுப்பினர்களும் இணைந்து மிகவும் உணர்வு பூர்வமாக மாவீரர்களை நினைவுகூரப்பட்டது.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

நன்றி

கலைபண்பாட்டுக் கழகம்
தமிழீழ அரசியல்துறை
ஐக்கிய இராச்சியம்.

  • தமிழீழ அரசியல்துறை

    தமிழீழ அரசியல்துறை - Political wings of Tamileelam

    Related Posts

    “நினைவேந்தல் நிகழ்வு – 2026.01.18”

    தமிழீழ விடுதலைப் புலிகள் மகளிர் படையணியின் முதற் பெண் தளபதி மேஜர் சோதியா அவர்களின் 36ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 33ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன்

    Read more

    தமிழீழ போராட்டத்தின் முதல் பெண் தளபதி மேஜர் சோதியா

    மகளீர் படையணி தளபதி மேஜர் சோதியா மைக்கல்பிள்ளை அமலலோற்பவவசந்தி நெல்லியடி, கரவெட்டி மேற்கு, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு: 26.09.1963 வீரச்சாவு: 11.01.1990 11.01.1990 அன்று வல்வெட்டித்துறை ஊறணிப் பகுதியில் சுகவீனம் (மூளைக்காய்ச்சல்) காரணமாக சாவு. துயிலுமில்லம்: எள்ளங்குளம் துயிலும் நிலை: நினைவுக்கல்  

    Read more

    Leave a Reply

    Discover more from தமிழீழ அரசியல்துறை

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading