“தமிழரின் வாக்குகள் தமிழருக்கே”

தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில், நாம் பெருந்தொகையாக வாழும் நாடுகளிலெல்லாம், தமிழ்த் தேசியமாக திரள்வதும், சிந்திப்பதும், செயற்படுவதும் இன்றைய காலத்தின் தேவையாகும். கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சிப் பீடங்களுக்கு வெளியே நின்று, எமது உரிமைகளுக்காகக் குரல் எழுப்பிப் போராடினோம். ஆனால், எதுவுமே நடந்து விடவில்லை. ஆகவே தான் எமது பிரதிநிதிகளை ஆட்சிப் பீடங்களுக்கு உள்ளே அனுப்பி, எமது நாட்டில் தமிழர்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்டது, இன அழிப்புத்தான் என்பதை நிறுவி, அதற்கான பரிகார நீதி கோரும் பெருமுயற்சிக்கான அடையாளமே, பிரித்தானியப் பாராளுமன்றத் தேர்தலில் நிறுத்தப்பட்ட தமிழ் வேட்பாளர்களாவர். எமது பிரச்சனைகளை அந்தந்த நாடுகளின் பாராளுமன்றில் உரக்கச் சொல்வதற்காக, எமது பிரதிநிதிகளை உள்ளே அனுப்பி, எமது உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கான, அதியுயர் அழுத்தங்களை நீங்கள் பிரதிநிதித்துவம் வகிக்கும் பாராளுமன்றத்தின் ஊடாக, இலங்கை அரசு மீது பிதயோகிக்க வைப்பதே, எமது தமிழ் வேட்பாளர்களின் கடமையாகும்.

பிரித்தானியப் பாராளுமன்றத் தேர்தலில், தமிழ் வேட்பாளர் எனப்படுகின்றவர் தமிழர்களின் பொது நிலைப்பாட்டின் குறியீடாகும். தமிழ்ப் பொது நிலைப்பாட்டின் வெளிப்பாடு எனப்படுவது, பிரயோக நிலையில் தமிழர்கள், சேனை சேனையாகத் திரண்டெழுந்து “தமிழரின் வாக்கு தமிழருக்கே” என்ற முழக்கத்தோடு, தமிழர்களின் பொது நிலைப்பாட்டை வாக்குகளாக வெளிப்படுத்துவதே. எல்லோரும் எழுந்து வாருங்கள் எமது தமிழ் வேட்பாளருக்கு அழுத்திப் போடுவோம் எமது வாக்கை.

கடந்த 15 ஆண்டுகளாக நமது இனத்தின் நீதிக்காகப் பிறநாடுகளை நம்பி ஏமாந்தது போதும். இனியும் அவர்களை நம்பி காலத்தை வீணடிக்காமல், அதிகாரத்தை நமது கைகளில் எடுக்க முடிந்தவரை முயற்சி செய்வோம்.

நம் பிள்ளைகள் எந்தக் கட்சியில் நின்று போட்டியிடுகிறார்கள் என்பது இங்கு ஒரு பொருட்டேயில்லை. அவர்கள் பாராளுமன்றத்திற்குள் குரல் எழுப்பப் போவது நம் இனத்தின் தேவைக்காகவே, நீதிக்காக என்பதை ஆணித்தரமாக நம்புவோம்.எந்த நாட்டில் வாழ்ந்தாலும், எந்தக் கட்சியில் அங்கத்துவம் வகித்தாலும், நமது பிள்ளைகளின் கையில் அதிகாரத்தைக் கொடுக்க நாம் அனைவரும் முதலில் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும்.

“தமிழரின் வாக்குகள் தமிழருக்கே” என்ற சித்தாந்ததுடன் நகருவோம். நமக்கான நீதிகளை நம்மவர்கள் ஊடாக உலகத் தரத்தில் ஓங்கி ஒலிக்கச் செய்வோம்.

  • தமிழீழ அரசியல்துறை

    தமிழீழ அரசியல்துறை - Political wings of Tamileelam

    Related Posts

    “நினைவேந்தல் நிகழ்வு – 2026.01.18”

    தமிழீழ விடுதலைப் புலிகள் மகளிர் படையணியின் முதற் பெண் தளபதி மேஜர் சோதியா அவர்களின் 36ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 33ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன்

    Read more

    தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலை

    தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலையில் கல்வி கற்றுவரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களால் மிகவும் உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.  

    Read more

    Leave a Reply

    Discover more from தமிழீழ அரசியல்துறை

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading