“தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், லெப்.கேணல் விக்டர் அவர்களினதும், லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு மாவீரர்களினதும் மற்றும் 2ம் லெப். மாலதி உட்பட நான்கு பெண் மாவீரர்களுக்குமான நினைவேந்தல் நாளும்”

கலைபண்பாட்டுக் கழகம்,
தமிழீழ அரசியல்துறை,
ஐக்கிய இராச்சியம்.

“தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், லெப்.கேணல் விக்டர் அவர்களினதும், லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு மாவீரர்களினதும் மற்றும் 2ம் லெப். மாலதி உட்பட நான்கு பெண் மாவீரர்களுக்குமான நினைவேந்தல் நாளும்”

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட முதலாவது லெப்.கேணலும், மன்னார் மாவட்டச் சிறப்புத் தளபதியுமான விக்டர் அவர்களின் 38ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும்,

யாழ். மாவட்டத் தளபதி லெப்.கேணல் குமரப்பா, திருகோணமலை மாவட்டத் தளபதி லெப்.கேணல் புலேந்திரன் உட்பட மேஜர் அப்துல்லா, கப்டன் ரகு, கப்டன் மிரேஸ், கப்டன் நளன், கப்டன் கரன், கப்டன் பழனி, லெப். தவக்குமார், லெப். அன்பழகன், 2ம் லெப். றெஜினோல்ட், 2ம் லெப். ஆனந்தக்குமார் ஆகிய பன்னிரு மாவீரர்களினதும்,

தமிழீழத்தின் முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி உட்பட 2ம்.லெப். கஸ்தூரி, வீரவேங்கை தயா, வீரவேங்கை றஞ்சி ஆகிய நான்கு பெண் மாவீரர்களினதும் 37ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும்,

கடந்த 20.10.2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:00 மணி தொடக்கம் பிற்பகல் 5:00 மணிவரை, Home Guard Club Hall, North Harrow, HA2 7TA எனும் முகவரியில் அமைந்துள்ள மண்டபத்தில் மிகவும் எழுச்சியாகவும், உணர்வு பூர்வமாகவும் நடைபெற்றிருந்தது.

நிகழ்வின் ஒழுங்கு வரிசையில், பொதுச்சுடரினை.. திருமதி.கமலா பாலசுப்பிரமணியம், திருமதி.நபீலா புகாறி, திருமதி.விதுஷா தியாகேஸ்வரன், திருமதி.ரோகினி ஆடலரசன், திரு.நடராசா றஜீபன், திரு.இளங்கீரன், திரு.ரகுநாதன் ஆகியோர் ஏற்றிவைத்தனர்.

தமிழீழத் தேசியக்கொடியினை.. தமிழீழ அரசியல்துறை ஐக்கிய இராச்சியத்தின் நிர்வாகப் பொறுப்பாளர் திரு.ஆடலரசன் அவர்கள் ஏற்றி வைத்தார்.

மாவீரர்களுக்கான ஈகைச்சுடரினை..
திருமதி.பவானி, திரு.இளங்கீரன், திருமதி.மதுரா, திருமதி.சந்திரிக்கா ஆகியோர் ஏற்றிவைத்தனர்.

மாவீரர்களுக்கான மலரஞ்சலியினை.. நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் செலுத்தியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து,
மாவீரர்கள் நினைவு சுமந்த நினைவுப் பகிர்வினை..
திருமதி.பவானி, திருமதி.சந்திரிக்கா, திருமதி.மதுரா, திருமதி.விழியரசி, திரு.வினோத், திரு.ரகுநாதன், திரு.இளங்கீரன், செல்வன்.ரிஷிகேஷ் ஆகியோர் நிகழ்த்தியிருந்தனர்.

திரு.நிருபன், திரு.அறிவாளன், திரு.கண்ணா ஆகியோர் இந்நிகழ்வினை ஒழுங்குசெய்து, நெறிப்படுத்தி, ஆவணப்படுத்தி இருந்தனர்.

நிகழ்வின் இறுதியாக, உறுதியேற்புடன் தேசியக்கொடி கையேற்கப்பட்டு நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றது.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

நிகழ்வு ஒருங்கிணைப்பு:
கலைபண்பாட்டுக் கழகம்,
தமிழீழ அரசியல்துறை,
ஐக்கிய இராச்சியம்.

  • தமிழீழ அரசியல்துறை

    தமிழீழ அரசியல்துறை - Political wings of Tamileelam

    Related Posts

    “நினைவேந்தல் நிகழ்வு – 2026.01.18”

    தமிழீழ விடுதலைப் புலிகள் மகளிர் படையணியின் முதற் பெண் தளபதி மேஜர் சோதியா அவர்களின் 36ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 33ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன்

    Read more

    தமிழீழ போராட்டத்தின் முதல் பெண் தளபதி மேஜர் சோதியா

    மகளீர் படையணி தளபதி மேஜர் சோதியா மைக்கல்பிள்ளை அமலலோற்பவவசந்தி நெல்லியடி, கரவெட்டி மேற்கு, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு: 26.09.1963 வீரச்சாவு: 11.01.1990 11.01.1990 அன்று வல்வெட்டித்துறை ஊறணிப் பகுதியில் சுகவீனம் (மூளைக்காய்ச்சல்) காரணமாக சாவு. துயிலுமில்லம்: எள்ளங்குளம் துயிலும் நிலை: நினைவுக்கல்  

    Read more

    Leave a Reply

    Discover more from தமிழீழ அரசியல்துறை

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading