மாவீரர் பணிமனை,
தமிழீழ அரசியல்துறை,
ஐக்கிய இராச்சியம்,
27/11/2024தமிழீழ மாவீரர் நாள் 2024
தமிழீழம் எனும் உயரிய இலட்சியத்திற்காக தங்களது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் புனித நாளான, நவம்பர் 27 புதன்கிழமை அன்று ஐக்கிய இராச்சியத்தின், கென்ட் பகுதியில் Elite Venue Hall, Dunkirk Close, Gravesend, Kent, DA12 5ND எனும் முகவரியில் உள்ள மண்டபத்தில், முற்பகல் 11:00 மணி தொடக்கம் பிற்பகல் 5:00 மணிவரை, தென்கிழக்கு இலண்டன் மற்றும் கென்ட் பகுதியில் வாழும் மக்களை ஒன்றிணைத்து, சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டு, மிகவும் உணர்வுபூர்வமாக தமிழீழ அரசியல்துறையினரால் மாவீரர் நாள் நினைவேந்தல் அனுட்டிக்கப்பட்டது.



















































































































































































































































































































