“நினைவேந்தல் நிகழ்வு – 2026.01.18”

தமிழீழ விடுதலைப் புலிகள் மகளிர் படையணியின் முதற் பெண் தளபதி மேஜர் சோதியா அவர்களின் 36ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 33ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 20ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், தமிழீழ அரசியல்துறையின் கலை, பண்பாட்டுக் கழகத்தினரால், இலண்டன் North Harrow வில் அமைந்துள்ள, Home Guard Club மண்டபத்தில் 18/01/2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 3:00 மணியளவில் நடாத்தப்பட்டது.

இவ் வீரவணக்க நினைவெழுச்சி நிகழ்வில் மண்டபம் நிறைந்த தாயக உணர்வாளர்களுடன், ஐக்கிய இராட்சிய தமிழீழ அரசியல்துறையினர், தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இவ் வீரவணக்க நிகழ்வானது பொதுச் சுடரேற்றலுடன் ஆரம்பமானது. தமிமீழத் தேசியக் கொடியினை ஐக்கிய இராச்சிய தமிழீழ அரசியல்துறையின் நிர்வாகப்
பொறுப்பாளர் திரு. ஆடலரசன் அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து பொது மாவீரர்களின் திருவுருவப் படத்திற்கான ஈகைச்சுடரினை தமிழீழ அரசியல் துறையைச் சேர்ந்த திரு .சுவர்ணன் அவர்கள் ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து மேஜர் சோதியா அவர்களின் திருவுருவபடத்திற்கான ஈகைச்சுரினை செல்வி. யசிந்தா அருட்பிரகாசம் அவர்களும், கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் திருவுருவப் படத்திற்கான ஈகைச்சுரினை சர்வதேச தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு. இளங்கீரன் அவர்களும், தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப் படத்திற்கான ஈகைச்சுரினை சர்வதேச தமிழீழ கலை, பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் திரு. அறிவாளன் அவர்களும் ஏற்றி வைத்தனர்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில், வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கும், இலங்கை, இந்திய இராணுவத்தினராலும், தேச விரோத சக்திகளாலும் கொல்லப்பட்ட அப்பாவிப் பொது மக்களையும், நினைவு கூர்ந்து அகவணக்கம்
செலுத்தப்பட்டது. தொடர்ந்து மாவீரர்களுக்கான மலர் வணக்கத்தினை திரு. குட்டி அவர்கள் ஆரம்பித்து வைக்க, அதனைத் தொடர்ந்து அனைவரும் மலர் வணக்கம் செலுத்தினர்.

அரங்க நிகழ்வாக மாவீரர்கள் தொடர்பான நினைவுரைகளும், எழுச்சிப் பாடல்கள், கவிதைகள் ஆகியன இடம் பெற்றன.

இறுதியாக உறுதியேற்புடன், தமிழீழத் தேசியக்கொடி கையேற்றலுடன்,
கலந்து கொண்ட அனைவராலும் “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற எழுச்சிப் பாடலும் ஒலிக்கப்பட்டு, வீரவணக்க நிகழ்வு நிறைவு பெற்றது.

இவ் வீரவணக்க நிகழ்வினை தமிழீழ விளையாட்டு ஆணையத்தின் பொறுப்பாளர் திரு. நிருபன் அவர்கள் சிறப்புடன் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழரின் தாகம்
தமிழீழத் தாயகம்”

கலை, பண்பாட்டுக் கழகம்
தமிழீழ அரசியல்துறை
ஐக்கிய இராச்சியம்

      

  • தமிழீழ அரசியல்துறை

    தமிழீழ அரசியல்துறை - Political wings of Tamileelam

    Related Posts

    தமிழீழ போராட்டத்தின் முதல் பெண் தளபதி மேஜர் சோதியா

    மகளீர் படையணி தளபதி மேஜர் சோதியா மைக்கல்பிள்ளை அமலலோற்பவவசந்தி நெல்லியடி, கரவெட்டி மேற்கு, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு: 26.09.1963 வீரச்சாவு: 11.01.1990 11.01.1990 அன்று வல்வெட்டித்துறை ஊறணிப் பகுதியில் சுகவீனம் (மூளைக்காய்ச்சல்) காரணமாக சாவு. துயிலுமில்லம்: எள்ளங்குளம் துயிலும் நிலை: நினைவுக்கல்  

    Read more

    வீரவணக்க நிகழ்வு -18.01.2026

    எதிர்வரும் 18.01.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2:00 மணியிலிருந்து மாலை 6:00 வரை, HOME GUARD CLUB HALL, NORTH HARROW, HA2 7TA எனும் மண்டபத்தில், தமிழீழ அரசியல் ஆலோசகர் “தேசத்தின் குரல்” கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கான 20ம்

    Read more

    Leave a Reply

    Discover more from தமிழீழ அரசியல்துறை

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading