நிர்வாகம்
தமிழீழ அரசியல்துறை
அனைத்து நாடுகள்
25/08/2024
கண்ணீர் வணக்கம்
அமரர் திரு.விராஜ் மென்டிஸ் அவர்கள்,
தமிழ்த் தேசியத்தின் மீது தீராத பற்றுக் கொண்டு, எம் இன விடுதலைக்காக உலகப் பரப்பில் குரல் கொடுத்து வந்த, பிறப்பால் சிங்களவரான திரு. விராஜ் மெண்டிஸ் அவர்கள் 16/08/2024 அன்று இயற்கை எய்திய செய்தி கேட்டு நாம் அதிர்ச்சியடைந்தோம்.
மனிதம் நிறைந்த மனிதனாக, மனிதர்களை நேசித்து, மனித உரிமைகளை மதித்து, தமிழ்த் தேசிய இனம் மீது சிங்களப் பேரினவாத அரசு நடத்தும் அநீதிகளுக்கு எதிராக, ஆணித்தரமாகக் கருத்துக்களை முன் வைத்துப் போராடிய உன்னத மனிதனாவர்.
சிறந்த கல்வி அறிவை உடைய இவர், சிங்கள அரசியல்வாதிகளின் எதிரியானார். ஏனெனில், அமரர் திரு. விராஜ் மென்டிஸ் அவர்கள், தன் இனத்துக்கு எதிராகக் குரல் கொடுக்கும் சிங்கள கல்வியாளர்களில் முதன்மையானவர்.
ஐ.நா.சபையிலும், மனித உரிமை அமைப்பு மையத்திலும், எமக்காக இவரது குரல் ஓங்கி ஒலித்தது. தமிழரின் தாயகம், தன்னாட்சி உரிமை, தேசியம் என்பவற்றின் உண்மைத்தன்மை உணர்ந்து தர்க்கரீதியாக, ஆய்வுரீதியாக, விஞ்ஞான ரீதியாக பல கருத்துக்களை, உள்ளத் தூய்மையுடன் முன் வைத்தார்.
இலங்கை அரசின் கோரப்பிடியிலிருந்து தப்பித்து, பிரித்தானியா நாட்டில் தஞ்சம் புகுந்த இவரை, பிரித்தானிய அரசு இவரின் புகலிட அங்கீகார கோரிக்கையை நிராகரித்து, மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். அதன் பின்னர் பல நெருக்கடிகளுக்கு மத்தியில் யேர்மன் நாட்டில் தஞ்சம் புகுந்த இவரின் புகலிடக் கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டது. அதன் பிறகான காலம் தொட்டு இறக்கும் வரை
எமக்காக ஓங்கிக் குரல் கொடுத்த திரு. விராஜ் மென்டிஸ் அவர்கள் இன்று எம்மோடு இல்லை.
அவரது உயரிய இலட்சிய கனவுகளை நாமும் சுமந்து கொள்வதுடன், அவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாரின் துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்கிறோம்.
திருமதி. ச. அசோகா
பொறுப்பாளர்
தமிழீழ அரசியல்துறை
அனைத்து நாடுகள்.
திரு. பொ. அற்புதன்
நிர்வாகப் பொறுப்பாளர்
தமிழீழ அரசியல்துறை
அனைத்து நாடுகள்.


















































































