“புலம்பெயர் அமைப்புகளுடனான சந்திப்பு”

நிர்வாகம்
தமிழீழ அரசியல்துறை
அனைத்து நாடுகள்
05/10/2024

புலம்பெயர் அமைப்புகளுடனான சந்திப்பு

அனைவருக்கும் வணக்கம்,
புலம்பெயர் அமைப்புக்களாகிய நாங்கள், கடந்த காலங்களில் தாயகக் கட்சி அரசியல் விவகாரங்களில் தாக்கமான பங்களிப்பு வழங்கத் தவறிய காரணத்தால், இன்று கட்சிகள் யாவும் பிளவுபட்டு, தமிழர்களின் வாக்கு வங்கி சிதைக்கப்பட்டு, கட்சி அரசியல் ஊடாக நாங்கள் ஈட்டக்கூடிய, அரசியல் உரிமைகளைப் பெற முடியாத, கையறு நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை, நீங்கள் அனைவரும் உணர்ந்திருப்பீர்கள்.

ஆகையால் எதிர்வரும் நவம்பர் 14ஆம் நாள் நடைபெறவுள்ள, இலங்கைப் பாராளுமன்றத் பொதுத் தேர்தலில், பங்குபற்ற உள்ள தமிழ் தேசியக் கட்சிப் பிரதிநிதிகளில், தமிழ்த்தேசியத்தின் உரிமை தொடர்பான விடயங்களில் அக்கறையோடு செயற்படுவோரென இனங்காணப்பட்ட நபர்களைத் தெரிவு செய்து, அவர்களுக்கான ஆதரவுச் செயற்பாடுகளை, ஒருங்கிணைந்து வழங்குவது தொடர்பாக, நாம் அனைவரும் ஆக்கபூர்வமாகக் கலந்துரையாட வேண்டியுள்ளது. எனவே தாயக அரசியலில் அக்கறையோடு செயற்படும் புலம்பெயர் அமைப்புகளுடனான மெய்நிகர் (ZOOM) இணையவழிச் சந்திப்பொன்றை, தமிழீழ அரசியல்துறை ஒருங்கிணைத்து நடத்த விரும்புகிறது.

இதன் மூலம் நாம் அனைவரும் கருத்தியல் மற்றும் செயற்பாட்டு முரண்பாடுகளைத் தவிர்த்து, சரியானவர்களை வெல்லவைக்க முடியுமென நம்புகிறோம். ஆகையால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 06.10.2024 அன்று, ஐரோப்பிய நேரம் மாலை 4.00 மணிக்கு நடைபெறவுள்ள இணையவழிச் சந்திப்பில் தவறாது கலந்து கொள்ளுமாறு அனைத்து அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் அன்புரிமையோடு அழைக்கிறோம். இணையவழி சந்திப்பிற்கான மெய்நிகர் இணைப்பு (ZOOM LINK) பின்னர் அறியத் தரப்படும்.
நன்றி.

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

திருமதி. ச. அசோகா
பொறுப்பாளர்
தமிழீழ அரசியல்துறை
அனைத்து நாடுகள்

திரு. பொ. அற்புதன்
நிர்வாகப் பொறுப்பாளர்
தமிழீழ அரசியல்துறை
அனைத்து நாடுகள்

  • தமிழீழ அரசியல்துறை

    தமிழீழ அரசியல்துறை - Political wings of Tamileelam

    Related Posts

    “நினைவேந்தல் நிகழ்வு – 2026.01.18”

    தமிழீழ விடுதலைப் புலிகள் மகளிர் படையணியின் முதற் பெண் தளபதி மேஜர் சோதியா அவர்களின் 36ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 33ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன்

    Read more

    வீரவணக்க நிகழ்வு -18.01.2026

    எதிர்வரும் 18.01.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2:00 மணியிலிருந்து மாலை 6:00 வரை, HOME GUARD CLUB HALL, NORTH HARROW, HA2 7TA எனும் மண்டபத்தில், தமிழீழ அரசியல் ஆலோசகர் “தேசத்தின் குரல்” கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கான 20ம்

    Read more

    Leave a Reply

    Discover more from தமிழீழ அரசியல்துறை

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading