மூத்த தளபதி மாவீரர் விநாயகம் | மாமனிதர் மா. க. ஈழவேந்தன் ஐயா | வைத்தியக் கலாநிதி மாமனிதர் ஜெயகுலராசா ஆகியோருக்குமான வீரவணக்க நிகழ்வு.

தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறையின், மூத்த தளபதி மாவீரர் விநாயகம் அவர்களிற்கான வீரவணக்க நிகழ்வும், தமிழ்த்தேசியப் பற்றாளர்கள் மாமனிதர் மா. க. ஈழவேந்தன் ஐயா, மற்றும் வைத்தியக் கலாநிதி மாமனிதர் ஜெயகுலராசா ஆகியோருக்குமான வீரவணக்க நிகழ்வும், இலண்டனில் 28/07/2024 அன்று ஞாயிறு மாலை ஐந்து மணிக்கு மிகவும் உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.


குறிப்பாக மூத்த தளபதி விநாயகம் அவர்களோடு பயணித்த போராளிகளும், மக்களும் இந்நிகழ்வுக்கு வருகை தந்ததோடு மூத்த தளபதி விநாயகம் அவர்கள் பற்றிய தங்களது நினைவுப் பகிர்வினையும் வழங்கியிருந்தனர்.

அத்துடன், வைத்தியக் கலாநிதி மாமனிதர் ஜெயகுலராசா மற்றும் மாமனிதர் ஈழவேந்தன் ஐயா ஆகியோரின் உறவினர்கள், நண்பர்கள் இந்நிகழ்விற்கு வருகை தந்திருந்தமை மேலும் சிறப்புடையதாகும்.

தமிழீழ அரசியல்துறை ஐக்கிய இராச்சியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வுகள் மிகவும் உணர்வு பூர்வமாக நடைபெற்றதுடன், தன்னலம் கருதாது எமக்காகவும் எமது தேசத்திற்காகவும் வாழ்ந்து வீரகாவியமானவர்களை நினைவு கூர்வது தமிழர்களுடைய வரலாற்றுக் கடமையாகும். அந்தவகையில் இந்நிகழ்வுகளைச் சிறப்பாக நடத்தியதில் நாம் மனநிறைவு அடைகிறோம்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

  • தமிழீழ அரசியல்துறை

    தமிழீழ அரசியல்துறை - Political wings of Tamileelam

    Related Posts

    “நினைவேந்தல் நிகழ்வு – 2026.01.18”

    தமிழீழ விடுதலைப் புலிகள் மகளிர் படையணியின் முதற் பெண் தளபதி மேஜர் சோதியா அவர்களின் 36ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 33ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன்

    Read more

    தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலை

    தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலையில் கல்வி கற்றுவரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களால் மிகவும் உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.  

    Read more

    Leave a Reply

    Discover more from தமிழீழ அரசியல்துறை

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading