“மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு” அவர்களுக்கு தாயகத்தில் நடத்தப்பட்ட நினைவேந்தல் நிகழ்வு.

அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மனித உரிமை ஆர்வலருமான மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு 07.02.2005 அன்று மட்டக்களப்பு இராணுவ கட்டுபாட்டுப் பகுதியான புனானைப் பகுதியில் வைத்து    மட்டு – அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர்  லெப். கேணல் கௌசல்யன் குழுவினர் பயணித்த வாகனத்தின் மீது சிறீலங்கா இராணுவம் மற்றும் தேசவிரோதக் கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்து  08.02.2005 அன்று மருத்துவ மனையில் சாவைத் தழுவிய மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு அவர்களின் 19ம் ஆண்டு   நினைவேந்தல் நிகழ்வு   தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைமையகத்தில் பொன்மாஸ்டர் தலைமையில் இடம்பெற்றது.

முக்கிய குறிப்பு :-

இவர் சிங்களப் படைகள்  தமிழர் தாயகத்தில் புரிந்த அட்டூழியங்களை நேர்மைத்திறனுடன் உலகிற்கு வெளிக்கொணர்ந்தார். இவரின் இனப் பற்றிற்கும் விடுதலைப் பற்றிற்கும் மதிப்பளித்து, அவரது நற்பணியைப் கௌரவிக்கும் முகமாக தமிழீழத் தேசியத் தலைவர் “மாமனிதர்” என்ற அதியுயர் தேசிய விருதை வழங்கி கௌரவித்தார்.

தமிழீழ அரசியல்துறை

தமிழீழ அரசியல்துறை - Political wings of Tamileelam

Related Posts

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலை

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலையில் கல்வி கற்றுவரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களால் மிகவும் உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.  

Read more

Leave a Reply