2024.02.07 – லெப். கேணல் கௌசல்யன், மாமனிதர் சந்திரநேரு நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு – சுவிஸ்

சுவிசில் நடைபெற்ற லெப். கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு அவர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!

2005.02.07 அன்று வெலிகந்தைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத் துணைப்படையினரால் படுகொலை செய்யப்படட மட்டு. அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் ஆகியோரின்… 

19ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாள்-  சுவிஸ் 2024.02.07

2005.02.07 அன்று வெலிகந்தைப் பகுதியில் சிறிலங்காத் துணைப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட மட்டு. அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் ஆகியோரின் நினைவெழுச்சி நாளானது 2024.02.07 புதன் அன்று சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அலுவலகத்தில் அமைந்துள்ள லெப். கேணல் கௌசல்யன் கலைக்கூடத்தில் நினைவுகூரப்பட்டது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வணக்க  நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன் மலர்மாலை அணிவித்தலைத் தொடர்ந்து ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் சுடர், மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

மாவீர வித்துகளின் நினைவுகள் சுமந்து நினைவுரை, மாவீரர் நினைவுப்பகிர்வும் இடம்பெற்றன. நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன. 

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – சுவிஸ்

தமிழீழ அரசியல்துறை

தமிழீழ அரசியல்துறை - Political wings of Tamileelam

Related Posts

“நினைவேந்தல் நிகழ்வு – 2026.01.18”

தமிழீழ விடுதலைப் புலிகள் மகளிர் படையணியின் முதற் பெண் தளபதி மேஜர் சோதியா அவர்களின் 36ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 33ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன்

Read more

தமிழீழ போராட்டத்தின் முதல் பெண் தளபதி மேஜர் சோதியா

மகளீர் படையணி தளபதி மேஜர் சோதியா மைக்கல்பிள்ளை அமலலோற்பவவசந்தி நெல்லியடி, கரவெட்டி மேற்கு, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு: 26.09.1963 வீரச்சாவு: 11.01.1990 11.01.1990 அன்று வல்வெட்டித்துறை ஊறணிப் பகுதியில் சுகவீனம் (மூளைக்காய்ச்சல்) காரணமாக சாவு. துயிலுமில்லம்: எள்ளங்குளம் துயிலும் நிலை: நினைவுக்கல்  

Read more

Leave a Reply