நிர்வாகம்
தமிழீழ அரசியல்துறை
அனைத்து நாடுகள்
24.01.2024
திரு. சிவஞானம் சிறீதரன்
தலைவர்
இலங்கை தமிழரசுக் கட்சி
இலங்கை
வாழ்த்துச் செய்தி
அன்பின் திரு. சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கு,
கடந்த 21.01.2024 நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் தாங்கள் அடைந்த வெற்றிக்கு, எமது உளப்பூர்வமான பாராட்டுகளைத் தமிழீழ அரசியல்துறையினராகிய நாம் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழீழ விடுதலைப் போராட்டம் முனைப்பாக நடைபெற்ற காலப்பகுதியில், மக்களோடு மக்களாகத் தாய்மண்ணில் வாழ்ந்து, அவர்களின் இன்னல்களை நேரடியாக, அவர்களோடு இணைந்து அனுபவித்த ஒருவர், தமிழீழ விடுதலைக்கு வித்திட்ட மூத்த கட்சிகளில் ஒன்றாகிய, தமிழரசுக் கட்சிக்கு தலைமைப் பொறுப்பேற்றிருப்பது, சனநாயகக் கோட்பாட்டின் அடிப்படையில் பயணிக்கும் தமிழீழ அரசியல்துறையினராகிய எமக்கும், உலகம் தழுவி வாழும் தமிழீழ மக்களுக்கும் பெரும் நம்பிக்கையையும், புத்துணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
2009 மே 18 முதல், கடந்த 15 ஆண்டுகாலமாக தமிழரசுக் கட்சி முன்னெடுத்திருந்த இராஐதந்திர முயற்சிகள் எவையும் பெரிதாக ஈழத் தமிழ் மக்களுக்கு எதையுமே பெற்றுத்தந்துவிடவில்லை. அவ்வாறிருப்பினும், தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரின் முதலாவது முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவாதமாகிய, ‘தன்னுடன் போட்டியிட்ட நண்பர் திரு. சுமந்திரன், திரு. யோகேஸ்வரனுடன் இணைந்து கட்சியுனுடைய செயற்பாட்டினை இன்னும் பல வழிகளில் எமது மக்களின் உரிமைக்காக, தேசிய இருப்புக்காக, தேசியத்தின் ஒவ்வொரு அங்குலத்துக்காகவும் தொடர்ந்து நாங்கள், பொறுப்போடும் கடமையுடனும் செயற்படுவோமென அவர் உறுதியளித்துள்ளமை’, மீண்டும் தமிழரசுக் கட்சி, தமிழின நலன்சார் அரசியலை அற்பணிப்போடு முன்னெடுப்பதற்கு முற்படுவதை உணர்த்தி நிற்கிறது.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில், ஈழத் தமிழர்களுக்கு உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் நீங்கள் முன்வைத்த, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சுயாட்சி அதிகாரத்திற்கு, அவர்கள் வழங்கிய மக்கள் ஆணையை நிறைவேற்ற, உங்களது முழுமையான ஆழுமையைப் பிரயோகிப்பீர்களென நாம் எதிர்பார்கிறோம்.
தாங்களும், தங்களது கட்சியும் முன்னெடுக்கும் தமிழின நலன் சார் முயற்சிகள் அனைத்தும் வெற்றியாக அமைய எமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி.
திருமதி ச. அசோகா
பொறுப்பாளர்
தமிழீழ அரசியல்துறை
அனைத்து நாடுகள்



















































































