
2009 மே 18 அன்று சிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் முள்ளிவாய்க்கால் மண்ணில் நடந்தேறிய தமிழர்கள் மீதான திட்டமிட்ட பாரிய இனவழிப்பின் 15ம் ஆண்டு நினைவு நாளை, இன்றைய தினம் இலண்டன் மாநகரிலுள்ள Uxbride College in Hayes முன்பாக நூறுக்கும் அதிகமான நமது தமிழ்ப்பிள்ளைகளுக்கும், Hayes Broadway பகுதியில் வைத்து சாலையில் பயணித்துக் கொண்டிருக்கும் மக்களுக்குமாக இரு இடங்களில் மிகவும் உணர்வு பூர்வமாக தமிழீழ அரசியல்துறை ஐக்கிய இராச்சியத்தினால், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டதுடன், சாலையில் சென்ற வேற்றின மக்களின் கேள்விகளுக்கு, நமது இனம் சந்தித்த 21ம் நூற்றாண்டின் அதியுச்ச இனவழிப்பு சார்ந்த விளக்கங்களும், நமது இளையோரால் வழங்கப்பட்டது.
தமிழின அழிப்பு நாள் – விரைவில், தமிழின எழுச்சி நாளாக நமது மக்களால் பிரகடனப்படுத்தப்படும் காலம், தொலைவில் இல்லை!
“முள்ளிவாய்க்கால் முடிவல்ல; முள்ளகவாய்க்கால் ஆரம்பம்!“
தமிழரின் தாகம் தணியாது,
நம் தாயகம் யாருக்கும் பணியாது!
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
தமிழீழ அரசியல்துறை
ஐக்கிய இராச்சியம்.

























































































































































































