மருத்துவமனையில் மிலேச்சத்தனமான தாக்குதல்கள் நடத்திய சிங்கள பேரினவாதம் வலி சுமந்த நினைவுகள்.
தமிழின அழிப்பின் உச்சம் முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை இரண்டாம் நாள்…
மருத்துவமனையில் மிலேச்சத்தனமான தாக்குதல்கள் நடத்திய சிங்கள பேரினவாதம்
மே 02 2009 –ன் அன்று இறுதியாக செயற்பட்டு வந்த ஒரேயொரு தற்காலிக மருத்துவமனை மீதும் இரண்டு தடவை சிங்கள பேரினவாத அரசால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த தாக்குதல்களில் ஏற்கனவே காயமடைந்திருந்த 64 பேர் கொல்லப்பட்டதுடன் காயமடைந்தவர்களுடன் கூட நின்ற உறவினர்களையும் சேர்தது 87 பேர் வரையானோர் காயமடைந்தனர்.
9.00 மணியளவில் இரண்டு அட்லறி செல்கள் வைத்தியாசாலைக்குள் விழுந்து வெடித்ததில் 23 பேர் கொல்லப்பட்டதுடன் 43 பேர் காயமடைந்தனர் மீண்டும் 10.30 மணியளவில் எண்ணிலடங்கா பல செல்கள் வைத்தியாசாலை மீது விழுந்து வெடித்ததில் 41 பேர் கொல்லப்பட்டதுடன் 53 பேர் காயமடைந்தனர் .























































































