2009.03.31 | பல வெற்றிக்கு வித்திட்ட வீரத்தளபதி “லெப். கேணல் அமுதாப்”

சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி லெப்.கேணல் அமுதாப் அவர்களின் 15 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்.

லெப். கேணல் அமுதாப்
சிதம்பரப்பிள்ளை சிவநாயகம்
பிறப்பு- 15.04.1976
வீ.சாவு-31.03.2009
சொந்த முகவரி- தவசியாகுளம்,சாஸ்திரிகூழாங்குழம்,வவுனியா.

18 ஆம் ஆண்டில் காலடி வைக்கும் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் கடந்த காலச் சாதனைகளை அப்படையணியின் துணைத் தளபதி அமுதாப் விபரித்துள்ளார்.

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி, 18 ஆம் ஆண்டில் கால் பதிப்பதனையிட்டு (10.04.08) நடைபெற்ற நிகழ்வில் அவர் பேசியதாவது:

இன்று நெருக்கடியான கால கட்டத்தில், நெருக்கமான களங்களில் நின்று கொண்டு நெருக்கடிகளைச் சந்தித்து சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கின்ற சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் 18 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் இந்நாளில் சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நான் நினைக்கின்றேன். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் 2 ஆம் கட்ட ஈழப்போர் தொடங்கப்பட்ட போது வன்னியைக் கைப்பற்றுவதற்றாக சிங்களப் படைகள் தயாராகிய நேரத்தில் அந்தச் சிங்களப்படை நடவடிக்கையை தடுத்து நிறுத்துவதற்காக ஒரு மரபு வழிப்படையணியை தேசியத் தலைவர் உருவாக்கினார். 10.04.1991 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாளில் சகல மாவட்டங்களில் இருந்தும் ஒன்றிணைக்கப்பட்ட போராளிகளைக்கொண்டு சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி உருவாக்கப்பட்டது. 05.05.1991 ஆம் ஆண்டு வடபிராந்திய இராணுவத்தளபதி லெப். ஜெனரல் டென்சில் கொப்பேக்கடுவ தலைமையில் வன்னியைக் கைப்பற்றுவதற்காக “வன்னி விக்கிரம” படை நடவடிக்கை தொடங்கப்பட்டது. அந்த நடவடிக்கையை முதல்களமாக சந்தித்த சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி 20 போராளிகளை இழந்து அந்தப் படை நடவடிக்கையை முற்று முழுதாக முறியடித்து தனது முதலாவது போர்க்களத்தில் சாதனையை நிகழ்த்தியது. தலைவர் எதிர்பார்த்ததனை கேணல் பால்ராஜ் தளபதியாக இருந்து லெப். கேணல் ராஜன் வழிநடத்தி அந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது. அன்று டென்சில் கொப்பேக்கடுவவை களத்தில் சந்தித்தோம். இன்று மன்னார் களத்தில் லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவின் வழிநடத்தலில் உள்ள படைகளை சந்தித்து 18 ஆண்டுகால போர் வரலாற்றை நாம் தகர்த்துக் கொண்டிருக்கின்றோம்.

அந்த ஓர்மம்- “ஓயாத அலைகள் – 03” இராணுவ நடவடிக்கையினால்- சிங்கள அரசாங்கத்தின்- சிங்களப் படையினரின்- கோட்பாடுகள் தகர்த்து எறியப்பட்டு இராணுவச் சாதனை நிகழ்த்தப்பட்டது. அக்களங்களில் எல்லாம் எமது சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியோடு சகோதர படையணிகளாக பல படையணிகள் களமுனையில் தமது சாதனைகளை நிகழ்த்தியிருக்கின்றன. இதே படையணிக்கு சிறப்புத் தளபதியாக இருந்து நாகர்கோவில் மண்ணில் “ஓயாத அலைகள் – 04” நடவடிக்கையைச் செய்ய முற்பட்ட நேரம் அது.

உடல்கள் கைப்பற்றப்பட்டன. 17 ஆவது ஆண்டை வெற்றியோடு நாம் நகர்த்தினோம். இன்று ஒரு ஆண்டைப் பூர்த்தி செய்து கொண்டிருக்கின்றது. இன்று வரைக்கும் அந்த அணியை வழிநடத்திய தாக்குதல் தளபதிகள் அனைவரும் மன்னார் களமுனையில் ஓய்வில்லாமல் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர். களத்தில் வெற்றி இலக்காகக்கொண்ட படையணியில் இருக்கின்ற போராளிகள்- தளபதிகள் அனைவரும் போரின் மையத்தில் நின்றுதான் சண்டையை வழிநடத்திக் கொண்டிருக்கின்றனர்.

எமக்கு மனோபலத்தைத் தருபவர்களாக எப்போதும் படைபலத்தைத் தருபவர்களாக நீங்கள் இருக்கின்ற போது நாம் என்ன வேலை செய்யவேண்டுமோ அதனை நாம் செய்வோம். அதனை நாம் செய்து கொண்டிருக்கின்றோம். எனவே, உங்களின் பிள்ளைகளாகிய நாம் உங்களுக்காக உங்களின் உயிர் வாழ்வுக்காக எமது உயிர்களைத் தியாகம் செய்து நாங்கள் சாதிப்போம். தளங்களில் நாம் வெல்வோம். அந்த நம்பிக்கை உங்களுக்கு இருக்கட்டும்.

தலைவர் எதிர்பார்ப்பதனையும் எமது மக்களாகிய நீங்கள் எதிர்பார்ப்பதனையும். களங்களில் நாம் செய்வோம். நாம் செய்து முடிப்போம் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கட்டும்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

  • தமிழீழ அரசியல்துறை

    தமிழீழ அரசியல்துறை - Political wings of Tamileelam

    Related Posts

    “நினைவேந்தல் நிகழ்வு – 2026.01.18”

    தமிழீழ விடுதலைப் புலிகள் மகளிர் படையணியின் முதற் பெண் தளபதி மேஜர் சோதியா அவர்களின் 36ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 33ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன்

    Read more

    தமிழீழ போராட்டத்தின் முதல் பெண் தளபதி மேஜர் சோதியா

    மகளீர் படையணி தளபதி மேஜர் சோதியா மைக்கல்பிள்ளை அமலலோற்பவவசந்தி நெல்லியடி, கரவெட்டி மேற்கு, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு: 26.09.1963 வீரச்சாவு: 11.01.1990 11.01.1990 அன்று வல்வெட்டித்துறை ஊறணிப் பகுதியில் சுகவீனம் (மூளைக்காய்ச்சல்) காரணமாக சாவு. துயிலுமில்லம்: எள்ளங்குளம் துயிலும் நிலை: நினைவுக்கல்  

    Read more

    Leave a Reply