2000.03.31 ” கரும்புலி மேஜர் மலர்விழி, கரும்புலி மேஜர் ஆந்திரா, கரும்புலி கப்டன் சத்தியா வீரவணக்க நாள் இன்றாகும்.

ரும்புலி மேஜர் மலர்விழி, கரும்புலி மேஜர் ஆந்திரா, கரும்புலி கப்டன் சத்தியா வீரவணக்க நாள் இன்றாகும்.

 ஓயாத அலைகள் 03 நடவடிக்கையின் போது 31.03.2000 அன்று ஆனையிறவுத் தளத்தினைக் கைப்பற்றும் சமரிற்கு வலுச்சேர்ப்பதற்காய் தாமரைக்குளப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த  சிறிலங்கா படையினரின் ஆட்லறி தளத்தினுள் ஊடுருவி நான்கு ஆட்லறிகளைத் தகர்த்தழித்துவிட்டு வெற்றியோடு தளம்  திரும்பிக்கொண்டிருந்தவேளை

சிறிலங்கா இராணுவத்தினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட

கரும்புலி மேஜர் மலர்விழி,

கரும்புலி மேஜர் ஆந்திரா,

கரும்புலி கப்டன் சத்தியா

ஆகிய கரும்புலி மாவீரர்களின் 24 ம் ஆண்டு வீரவணக்க  நாள் இன்றாகும்.

வீரத்தின் சிகரங்களாக 31.03.2000 அன்று தம் நீண்டகாலக் கனவை நிறைவேற்றி நான்கு ஆட்லறிகள் தகர்த்து மூன்று பெண் கரும்புலிகளும் மிகவும் துணிச்சலோடு சண்டையிட்டு எதிரியின் கோட்டையாயிருந்த தாமரைக்குளப் பகுதியில் பன்னிரெண்டு கொமாண்டோக்களைக் கொன்று கொமாண்டோப் படையைக் கதிகலங்கவைத்து மகிழ்வோடு எங்கள் தேசத்தின் நினைவுக் கற்களில் அழியாதபடி ஓயாத அலைகளின் வெற்றிவீரர்களாக தங்கள் பெயரையும் பொறித்துக்கொண்டார்கள்.


தமிழீழ அரசியல்துறை

தமிழீழ அரசியல்துறை - Political wings of Tamileelam

Related Posts

“நினைவேந்தல் நிகழ்வு – 2026.01.18”

தமிழீழ விடுதலைப் புலிகள் மகளிர் படையணியின் முதற் பெண் தளபதி மேஜர் சோதியா அவர்களின் 36ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 33ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன்

Read more

தமிழீழ போராட்டத்தின் முதல் பெண் தளபதி மேஜர் சோதியா

மகளீர் படையணி தளபதி மேஜர் சோதியா மைக்கல்பிள்ளை அமலலோற்பவவசந்தி நெல்லியடி, கரவெட்டி மேற்கு, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு: 26.09.1963 வீரச்சாவு: 11.01.1990 11.01.1990 அன்று வல்வெட்டித்துறை ஊறணிப் பகுதியில் சுகவீனம் (மூளைக்காய்ச்சல்) காரணமாக சாவு. துயிலுமில்லம்: எள்ளங்குளம் துயிலும் நிலை: நினைவுக்கல்  

Read more

Leave a Reply