இங்கிலாந்து துடுப்பாட்ட அணியில் ஈழத் தமிழச்சி!

வாழ்த்துகள்
செல்வி. அமுருதா சுரேன்குமார்.

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பிரித்தானியக் கிரிக்கெட் வீராங்கனையான அமுருதா சுரேன்குமார், இங்கிலாந்து துடுப்பாட்ட அணி – Under 19 பெண்கள் அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

17 வயதான (2006.10.24) அமுருதா, கடந்த ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்தில் பிரசித்தி பெற்ற சன்ரைசர்ஸ் அகாடமியில் ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

அமுவுக்கு துடுப்பாட்டத்தின் மீதான காதல் சிறு வயதிலிருந்தே ஊட்டப்பட்டது. இவரது தந்தை சிவா சுரேன்குமார், யாழ்ப்பாணத்தில் உள்ள (St.John’s College) செயின்ட் ஜோன்ஸ் கல்லூரிக்காக விளையாடி, ஒரு பெரிய போட்டியில் அதிக ஓட்டங்களைக் குவித்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

ஏப்ரல் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள Under 19 பெண்கள் துடுப்பாட்ட முக்கோணத் தொடரில் அமு சுரேன்குமார் அவர்கள் விளையாடவுள்ளார்.

எம் நாட்டைச் சேர்ந்த ஒரு இளம் பெண் தன் திறமை மூலம் உலக அரங்கில் பிரசித்தி பெறுவது மகிழ்ச்சியான விடயம்.

செல்வி அமு சுரேன்குமார் மேலும் பல சாதனைகளைப் புரிய நாமும் வாழ்த்துகிறோம்!

  • தமிழீழ அரசியல்துறை

    தமிழீழ அரசியல்துறை - Political wings of Tamileelam

    Related Posts

    “நினைவேந்தல் நிகழ்வு – 2026.01.18”

    தமிழீழ விடுதலைப் புலிகள் மகளிர் படையணியின் முதற் பெண் தளபதி மேஜர் சோதியா அவர்களின் 36ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 33ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன்

    Read more

    தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலை

    தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலையில் கல்வி கற்றுவரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களால் மிகவும் உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.  

    Read more

    Leave a Reply