முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எழுதியுள்ள “என்னை ஜனாதிபதிப் பதவியிலிருந்து அகற்றுவதற்கான சதி” என்ற புத்தகம் கொழும்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் அவா் தெரிவித்திருக்கும் பல விடயங்கள் கடும் விமா்சனத்துக்கும் உள்ளாகியிருக்கின்றது. இந்தப் பின்னணியில் இந்த நுாலின் உள்ளடக்கம், அதன் நோக்கம், அதன் தாக்கங்கள் என்பன தொடா்பில் மூத்த பத்திரிகையாளா் வீரகத்தி தனபாலசிங்கம் தாயக களம் நிகழ்வில் தனது கருத்துக்களை முன்வைக்கின்றாா்.


















































































