2009.03.09 அன்று சிறிலங்காப்படையினரின் ஆட்லெறி பீரங்கி தளத்தை தாக்கியழித்த கரும்புலிகள்

2009.03.09 அன்று   சிறிலங்காப்படையினரின்  ஆட்லெறி பீரங்கி தளத்தை தாக்கியழித்த கரும்புலிகள் 
கரும்புலி லெப். கேணல் மாறன், 
கரும்புலி மேஜர் தமிழ்மாறன், 
கரும்புலி கப்டன் கதிர்நிலவன் 
ஆகிய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

வட தமிழீழம் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு தேராவில் பகுதியில் 09.03.2009 அன்று சிறிலங்காப் படையினரின் பாரிய தற்காலிக ஆட்லெறி பீரங்கி தளத்தில் ஊடுருவி கைப்பற்றி தாக்கியழித்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி லெப். கேணல் மாறன், கரும்புலி மேஜர் தமிழ்மாறன், கரும்புலி கப்டன் கதிர்நிலவன் ஆகிய கரும்புலி மாவீரர்களின் உட்பட ஏனைய மாவீரர்களின் 14 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு பகுதியில் உள்ள தேராவில் பகுதியில் சிறிலங்கா படையினர் அண்மையில் அமைத்திருந்த ஆட்லெறி பீரங்கித் தளத்தை 09.03.2009 அன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் படையணியினரும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணியினரும் இணைந்து தாக்கியழித்துள்ளனர்.

ஆறு ஆட்லெறி பீரங்கிகளை கைப்பற்றிய விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் படையணியினரும் கேணல் கிட்டு பீரங்கி படையணியினரும் அவற்றினை அங்கிருந்து இயக்கி சிறிலங்கா படையினர் மீது செறிவான பீரங்கித் தாக்குதல்களை நடத்திய பின்னர் அத்தளத்தினை அழித்துவிட்டு தளம் திரும்பினர்.

இதில் அப்பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான எறிகணைகளும் வெடிமருந்துகளும் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. சிறிலங்கா படையினர் தரப்பில் 50க்கும் அதிமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர்.

இத்தாக்குதலில் 3 கரும்புலிகள் உட்பட 7 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

தாயக  விடுதலை  கனவுகளுடன் கல்லறையில் உறங்கும் தேசப்புயல்கள்….!

இவர்களுடன் கிட்டு பீரங்கிப் படையணி மாவீரர்களான……….. 

மேஜர் மலர்ச்செம்மல் 
கப்டன் ஈழவிழியன் 
கப்டன் காலைக்கதிரவன் 
கப்டன் கலையினியவன் 

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”


தமிழீழ அரசியல்துறை

தமிழீழ அரசியல்துறை - Political wings of Tamileelam

Related Posts

“நினைவேந்தல் நிகழ்வு – 2026.01.18”

தமிழீழ விடுதலைப் புலிகள் மகளிர் படையணியின் முதற் பெண் தளபதி மேஜர் சோதியா அவர்களின் 36ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 33ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன்

Read more

தமிழீழ போராட்டத்தின் முதல் பெண் தளபதி மேஜர் சோதியா

மகளீர் படையணி தளபதி மேஜர் சோதியா மைக்கல்பிள்ளை அமலலோற்பவவசந்தி நெல்லியடி, கரவெட்டி மேற்கு, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு: 26.09.1963 வீரச்சாவு: 11.01.1990 11.01.1990 அன்று வல்வெட்டித்துறை ஊறணிப் பகுதியில் சுகவீனம் (மூளைக்காய்ச்சல்) காரணமாக சாவு. துயிலுமில்லம்: எள்ளங்குளம் துயிலும் நிலை: நினைவுக்கல்  

Read more

Leave a Reply