மீண்டும் ஓர் பாரதத் துரோகம்! | தமிழீழ அரசியல்துறை

நிர்வாகம்
தமிழீழ அரசியல்துறை
அனைத்து நாடுகள்
04/03/2024


தமிழீழ தேசத்தின் விடுதலையை தணியாத இலட்சியமாக வரித்து அந்த உன்னத இலட்சியத்திற்காக மூன்று தசாப்தங்களுக்கு மேலாக சிறைக் கம்பிகளுக்குள் தனது வாழ்வின் பெரும்பகுதியை அர்ப்பணித்த ஓர் உன்னதமான இனப்பற்றாளன் சாந்தன் என்றழைக்கப்படும், தில்லையம்பலம் சுதேந்திரராஜா அவர்களை நாமின்று இழந்து விட்டோம். மனிதன் பிறக்கும் போதே சாவும் அவனோடு சேர்ந்து பிறப்பெடுக்கிறது. இந்தச் சாவின் பிடியில் இருந்து யாரும் தப்பி விட முடியாது, யாரும் ஓடி ஒழிந்து கொள்ளவும் முடியாது. அது வாழ்வின் ஒரு நிகழ்வாக என்றோ ஒருநாள் எதிர்கொள்ளப்பட வேண்டிய நிகழ்வுதான். இப்படி எழுதி நாம் அமரர்.சாந்தனின் சாவுக்கு ஆறுதல் கூற முடியாது.

விடுதலைக்கான நீண்ட பயணத்தில் எமது இனம் எத்தனையோ அற்புதமான தியாகங்களை புரிந்திருக்கின்றது, எத்தனையோ அற்புதமான மரணங்களைச் சந்தித்திருக்கின்றது. ஆனால் சாந்தனின் சாவு ஈழத்தமிழர் வரலாற்றில் வித்தியாசமானதோர் பரிமாணம் கொண்டது. இது இந்திய, திராவிடத் துரோகத்தால் நிகழ்த்தப்பட்ட, சரித்திரத்தில் மறக்க முடியாத, மன்னிக்க முடியாத ஒரு வரலாற்றுச் சோக நிகழ்வாகும். கடந்த காலப் போரில் காயப்பட்ட வடுக்களோடிருந்த ஈழத் தமிழினத்தின் தேசிய ஆன்மாவை அதிரவைத்த துயர நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகும்.

சாந்தன் செய்யாத குற்றத்திற்காக, தன் வாழ்நாளின் பெரும் பகுதியை, மனிதம் மரித்து விட்ட இந்தியச் சிறைகளில் கழித்திருக்கின்றான். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என அனைத்துலக நாடுகளை ஏமாற்றிக் கொண்டிருக்கும், இந்திய நாட்டின் சமனற்ற சட்டத்தால் சாந்தன் வஞ்சகமாக 28.02.2024 அன்று கொலை செய்யப்பட்டுள்ளார். சாந்தனின் மரணம் சர்வதேச சட்ட நியமனங்களுக்கு முரணாக நடந்ததோர், வலிநிறைந்த துன்பியல் நிகழ்வாகும். இந்திய மத்திய அரசினதும், தமிழ்நாட்டில் தற்பொழுது ஆட்சியிலிருக்கும் தி.மு.க மாநில அரசினதும் தமிழின விரோதப் போக்கே, இந்த அநியாயமான மரணத்திற்கு மூலகாரணம் என்பதை நாம் நன்றாகப் புரிந்துள்ளோம்.


சாந்தன் எங்களுக்காக, எங்கள் மண்ணுக்காக, எங்கள் பாதுகாப்புக்காக, எங்கள் சுதந்திரத்திற்காக, எங்கள் உரிமைக்காக, எங்கள் கௌரவத்திற்காக தன்னை ஆகுதியாக்கிக்கொண்டான். தான் நேசித்த மக்களுக்காக, தான் நேசித்த மண்ணுக்காக ஒருவன் எத்தகைய உன்னத தியாகத்தைச் செய்ய முடியுமோ, அந்தகைய அர்ப்பணிப்பு மிக்க தியாகத்தை 32 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் கழித்துவிட்டு, தாய்மண்ணையும், தனது வயோதிபத் தாயார் மரணிக்கமுன் ஒரு தடவை அவரையும் பார்த்துவிடவேண்டும் என்ற துடிப்போடு நாள் குறித்து சாந்தன் காத்துக் கொண்டிருந்தான். ஆனால் அதற்குள் அவன் திட்டமிட்டுச் சாகடிக்கப்பட்டிருக்கிறான். இப்படி ஒரு கொடுமை யாருக்கும் நடந்திருக்கக் கூடாது. ஆனால் இரக்கமற்ற பாரத தேசம் சாந்தனையும் விட்டு வைக்கவில்லை.

இவரின் பிரிவால் துயறுற்றிருக்கும் தாயார் மற்றும் குடும்ப உறவினர்கள் எல்லோருடையதும் ஆழ்ந்த துயரில், ‘’தமிழீழ அரசியல்துறை’’ தமிழீழ மக்களின் சார்பாகப் பங்கெடுத்துக் கொள்கிறது. அமரர். சாந்தன் எம்மை விட்டு எங்கும் போய்விடவில்லை. எமது தேசத்தின் சுதந்திர மூச்சாக, எமக்குள்ளிருந்து எம்மை இயக்குகின்ற இலட்சிய நெருப்பாக, அவர் என்றும் எமக்குள் எரிந்து கொண்டிருப்பார். அமரர். சாந்தன் போன்று எமது மண்ணின் விடுதலைக்காய் வித்தாகிப்போன உயிர்க்கொடையாளிகளின், தாயகக் கனவை நனவாக்க, தமிழீழ இலட்சியப் பயணத்தை உறுதியோடு முன்னெடுக்கவேண்டுமென அனைத்துத் தமிழ் மக்களையும் ’தமிழீழ அரசியல்துறை’’ வேண்டிநிற்கின்றது.

‘’தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’’

நன்றி.

திருமதி ச. அசோகா
பொறுப்பாளர்
தமிழீழ அரசியல்துறை
அனைத்து நாடுகள்


  • தமிழீழ அரசியல்துறை

    தமிழீழ அரசியல்துறை - Political wings of Tamileelam

    Related Posts

    தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலை

    தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலையில் கல்வி கற்றுவரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களால் மிகவும் உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.  

    Read more

    Leave a Reply