
சாந்தன் அவர்களின் கண்ணீர் வணக்க நிகழ்வு | தமிழீழ அரசியல்துறை – ஐக்கிய இராச்சியம்
செய்யாத குற்றத்திற்காக 33 ஆண்டுகள் கொடுஞ்சிறைத் தண்டனையை அனுபவித்து வந்தவரான திரு.சாந்தன் என்று அழைக்கப்படும் தில்லையம்பலம் சுதேந்திரராஜா அவர்கள் இந்திய ஆட்சியாளர்களின் சதித்திட்டத்தினால் கடந்த புதன்கிழமை (28.02.2024) அன்று அதிகாலை நீதிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று 2024.03.03 இவருக்கு கண்ணீர் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ளவும், மீதி மூவரின் விடுதலைக்காக இந்திய அரசுக்கு வலியுறுத்தும் முகமாகவும் நிகழ்வொன்றை தமிழீழ அரசியல்துறை – ஐக்கிய இராச்சியம் ஏற்பாடு செய்தனர்.
இந்நிகழ்வில் தமிழீழ அரசியல்துறை பிரித்தானிய உறவுகள், நாம் தமிழர் பிரித்தானிய, வீரத்தமிழர் முன்னணியினர், தமிழின உணர்வாளர்கள் , மகளிர் அமைப்புகள், கலந்து கொண்டு சாந்தன் அவருக்கு கண்ணீர் வணக்கத்தின் தெரிவித்தனர்.











































































































































