எல்லாளன் நடவடிக்கையில் காவியமான கரும்புலி மறவர்களின் நினைவாய் “எல்லாளன்” படக் காட்சிகளை திரைக்காவியாமாக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை 17.02.2008 அன்று பளைப் பகுதியில் இடம்பெற்ற சிறிலங்காப் படையினரின் எறிகணை தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட நிதர்ன முதன்மைப் படப்பிடிப்பாளர் / போராளிக் கலைஞன் லெப். கேணல் தவம், மேஜர் புகழ்மாறன், போருதவிப்படை வீரர் சுப்பிரமணியம், போருதவிப்படை வீரர் சிறிமாறன் ஆகிய மாவீரர்களின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.






















































































































