
சுப்பிரமணியம் ராமச்சந்திரன்
யாழ். தினக்குரல் மற்றும் வலம்புரி பத்திரிகைகளின் நெல்லியடி பிரதேச செய்தியாளராக கடமையாற்றிவந்தார்
சுப்பிரமணியம் ராமச்சந்திரன், 2007ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி காணாமலாக்கப்பட்டார். இவர் காணாமலாக்கப்படும்போது யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் யாழ். தினக்குரல் மற்றும் வலம்புரி பத்திரிகைகளின் நெல்லியடி பிரதேச செய்தியாளராக கடமையாற்றிவந்தார். இவர் காணாமலாக்கப்பட்டு இன்றோடு 17 வருடங்களாகின்றன. ராமச்சந்திரன் காணாமலாக்கப்பட்ட அன்று நடந்த சம்பவங்கள், விசாரணைகள், ஆதாரங்கள், அவர் வழங்கிய செய்திகளின் தன்மை, அவர் பற்றிய விபரங்களை ராமச்சந்திரனின் அக்கா மற்றும் காணாமலாக்கப்பட்ட காலப்பகுதியில் யாழ். தினக்குரல் பத்திரிகையின் பொறுப்பாசிரியராக இருந்த முத்துத்தம்பி வாமதேவன் மாற்றத்துடன் பகிர்ந்துகொண்டனர்.




















































































