தாயக அரசியல்துறையினரால் தாயகத்தில் பல மாவட்டங்களில் மிகவும் உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்ட தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களின் 35ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.
இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் கீழ் தமிழீழ நிலப்பரப்பில் இந்திய இராணுவ ஆதிக்க சக்தியின் அடக்கு முறைக்கு எதிராக தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்கள் முன்னெடுத்த அகிம்சைப் போராட்டத்தைத் தொடர்ந்து.. சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்து தமிழீழத்தில் உயிர்நீத்த முதல் பெண்மணி இவராவார்.





































































































