“அடிக்கற்கள் நாயகர்கள் நினைவு வெற்றிக் கிண்ணம்” விளையாட்டு பெரு நிகழ்வில் பங்கேற்க நாம் தமிழர் கட்சி அழைப்பு


எம் இனிய பிரித்தானியா வாழ் தமிழர்களுக்கு வணக்கம்.
தமிழீழ அரசியல்துறை ஐக்கிய இராச்சியத்தின் தமிழீழ விளையாட்டு ஆணையம் ஆண்டு தோறும் நடத்துகின்ற “அடிக்கற்கள் நாயகர்கள் நினைவு வெற்றிக் கிண்ணம்” எனும் மாபெரும் விளையாட்டு விழாவானது, ROUNDSHAW PLAYING FIELD, HANNIBAL WAY, CROYDON, CRO 4RW எனும் இடத்தில் 02.06.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணி தொடக்கம் மாலை 8:00 மணி வரை மிகப் பிரமாண்டமாக நடைபெறவிருக்கின்றது.


இந்த நிகழ்விற்கு நாம் தமிழர் பிரித்தானியா, தன்னாலான அத்தனை ஆதரவையும் கொடுத்து, தோளோடு தோள் நிற்கின்றது. அந்த வகையில் நாம் தமிழர் பிரித்தானியா பெருங்குடும்பத்தில் பயணிக்கும் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் கோடைகால நிகழ்வாக இடம்பெறும் இந்த நிகழ்வில், குடும்பம் குடும்பமாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புரிமையோடு
கேட்டுமாகக் கின்றது கொள்ள வேண்டு.


கூடவே, குறித்த இந்த நிகழ்விற்கு எதிர்வரும் யூலை மாதம் இடம்பெறப் போகும் பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போகின்ற நாடாளுமன்ற வேட்பாளர்களும் வருகை தந்து நம் மக்களிடம் தம் வாக்குறுதிகளைத் தரவிருக்கின்றார்கள். இதன் பொருட்டும் அக்கறையுள்ள உறவுகள் கலந்து கொண்டு, தம் கருத்துக்களை வேட்பாளர்கள் மத்தியில் பதிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம்.


‘இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை’
நாம் தமிழர் பிரித்தானியா
தொடர்புக்கு: நாம் தமிழர் பிரித்தானியா ஒருங்கிணைப்பாளர்கள்: திரு.தி.சிவராமன் – 0746 737 4624
திரு.வி.மயூரன் – 0745 931 5674


இலக்கு ஒன்றுதான், இனத்தின் விடுதலை.

இனம் ஒன்றாவோம், இலக்கை வென்றாவோம்.

  • தமிழீழ அரசியல்துறை

    தமிழீழ அரசியல்துறை - Political wings of Tamileelam

    Related Posts

    தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலை

    தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலையில் கல்வி கற்றுவரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களால் மிகவும் உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.  

    Read more

    Leave a Reply

    Discover more from தமிழீழ அரசியல்துறை

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading