“மேதகு 70 “என்னும் தமிழீழ விடுதலைச் சித்தாந்தம்

தமிழீழத்  தேசியத்தலைவரின் சிந்தனையை அழித்து தமிழீழ விடுதலைப்போராட்டத்தை அழித்துவிட அல்லது நீர்த்துப்போகச் செய்ய எதிரிகளும் துரோகிகளும் கடும் பிரயத்தனம் செய்கின்றனர். 

 தேசியத்தலைவரின் சிந்தனை உயிர்ப்புடன் இருக்கும் வரை எமது விடுதலைப்போராட்டத்தை எவராலும் நெருங்க முடியாது .  எனவே தேசியத்தலைவரின் சிந்தனையை  உலகெலாம் பரவச்செய்ய நாம் எடுக்கும் மிகப்பெரிய  தமிழீழ விடுதலை நடவடிக்கைதான் மேதகு 70 என்னும் வாழும் சித்தாந்தம்  இந்நடவடிக்கையை அனைத்துத் தமிழீழ விடுதலைச் செயற்பாட்டாளர்களும் முழுவீச்சுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

 இது ஒரு கொண்டாட்டம் அல்ல, ஒரு மாபெரும் சிந்தனைப் புரட்சிக்கு அடி அத்திவாரமிட்ட தமிழீழத்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் நீண்ட படைநடப்பில் நாமும் இணைந்து கொள்கிறோம் என்ற போர்முரசம். ஆயுதங்கள் மௌனிக்கப் பட்டபோதும் மேதகு பிரபாகரன் சிந்தனை என்னும் போராயுதம் எம்மை வழிநடத்தி நின்று போராடும் என எதிரிகளிற்கும் துரோகிகளிற்கும் தமிழர்களின் புலிப்பண்போடு நிறைந்த சேனை விடுக்கும் சவால் முடிந்தால் மோதிப்பார்! 

தலைவனின் சிந்தனை உம்மை துவம்சம் செய்யும் .

​ அனைவரும் வாரீர் !​

​எந்த சக்தியாலும்  நெருங்கமுடியாத  தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்  வாழியவே!!!

தமிழீழ அரசியல்துறை

தமிழீழ அரசியல்துறை - Political wings of Tamileelam

Related Posts

“நினைவேந்தல் நிகழ்வு – 2026.01.18”

தமிழீழ விடுதலைப் புலிகள் மகளிர் படையணியின் முதற் பெண் தளபதி மேஜர் சோதியா அவர்களின் 36ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 33ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன்

Read more

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலை

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலையில் கல்வி கற்றுவரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களால் மிகவும் உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.  

Read more

Leave a Reply