2024.04.19 | தியாகச் சுடர் அன்னை பூபதி அவர்களின் 36வது நினைவு தினம் தாயக அரசியல் நடுவத்தின் ஒழுங்கமைப்பில் தர்மபுரத்தில்  உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட தர்மபுரத்தில் அன்னை பூபதி கணபதிபிள்ளை அவர்களின் 36வது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

தாயக அரசியல் நடுவகத்தின் ஏற்பாட்டில் பொது அமைப்புகளின் ஊடாக இன்று (19)திகதி மாலை 04.00மணியளவில் தர்மபுரம் ஆர். வீ திருமண மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.குறித்த நிகழ்வில் முன்னால் வடமாகண கலவி அமைச்சர் குருகுலராசா மற்றும் முன்னால் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜா ஜீவராஜா மற்றும் தேராவில் மாவீர்ர் துயிலுமில்ல உறுப்பினர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஆரம்ப நிகழ்வாக மாவீர்ர்களின் பொற்றோர் ஒருவரால் மங்கள விளக்கேற்றப்பட்டு பின் அன்னையின் திருவுருவ படத்திற்கு முன்னால் வடமாகண கலவி அமைச்சர் குருகுலராசா அவர்களினால் மலர்மாலை அனிவித்து பின்
முன்னால் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜா ஜீவராஜா அவர்களினால் மலர்தூவி அதன் தொடராக பொதுமக்களும் மலர்தூவி வரவேற்பு நடனத்துடன் நிகழ்வு ஆரம்பமானது.

அதனை அடுத்து 70 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

  • தமிழீழ அரசியல்துறை

    தமிழீழ அரசியல்துறை - Political wings of Tamileelam

    Related Posts

    தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலை

    தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலையில் கல்வி கற்றுவரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களால் மிகவும் உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.  

    Read more

    Leave a Reply

    Discover more from தமிழீழ அரசியல்துறை

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading