வட தமிழீழம் , முல்லை மாவட்டம் ஆனந்தபுரம் பகுதியில் வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் சிங்கள படைகள் வீசிய இரசாயன நச்சுக்குண்டுத் தாக்குதலில் 04.04.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் ஆதவன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா, கேணல் நாகேஸ், கேணல் தமிழ்ச்செல்வி, கேணல் அமுதா உட்பட ஆனந்தபுரத்தில் உயிர்நீத்த ஏனைய மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு சுமந்த வணக்க நிகழ்வு பெல்சியத்தில் கடந்த 07.04.2024 ஞாயிற்றுக்கிழமை 18.30 மணியளவில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு பெல்சியம் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் உணர்வுடன் நடாத்தப்பட்டது

























































































