கொழும்பு விமான நிலையத்தில் ஆறு மணி நேர விசாரணையின் பின்னர் வெளிவந்த மூவர்!!!

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த முருகன், ரொபேட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் நாடு திரும்பிய நிலையில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் ஆறு மணி நேர விசாரணைகளின் பின்னர் இன்று (03.04.2024) மாலை 5.15 மணியளவில் வெளியேறியுள்ளனர்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட நிலையிலும் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முருகன், ரொபேட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய ஈழத்தமிழர்கள் மூவரும் இன்று (03.04.2024) புதன்கிழமை காலை 11.30 மணிக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

தமிழ்நாட்டில் இருந்தே வெளிநாடுகளில் உள்ள தமது குடும்பத்துடன் இணைந்து கொள்வதற்காக சகல நாடுகளுக்குமான கடவுச் சீட்டினை வழங்குமாறு மூவரும் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அதனை வழங்குவதில் இந்திய மத்திய அரசு முட்டுக்கட்டையாக செயற்பட்டு வந்ததை அடுத்து இலங்கை திரும்புவதற்கான தற்காலிக கடவுச்சீட்டினை சென்னையில் உள்ள இலங்கை துணைத்தூதரகத்தினால் கடந்த வாரம் வழங்கப்பட்டிருந்தது.

இதையடுத்து அவர்கள் இலங்கை திரும்புவதற்கான நடவடிக்கைகள் சென்னை உயர்நீதிமன்ற தலையீட்டில் முன்னெடுக்கப்பட்டு வந்ததையடுத்து மூவரும் இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கான நடவடிக்கை சம்பந்தம்பட்ட தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதையடுத்து திருச்சி சிறப்பு முகாமில் இருந்து முருகன், ரொபேட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய மூவரும் நேற்று செவ்வாய்க்கிழமை (02.04.2024) இரவு 10 மணிக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் நேற்று அதிகாலை சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இன்று (03.04.2024) புதன்கிழமை காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து கொழும்பு புறப்படும் சிறிலங்கன் எயார்லைன்ஸ் பயணிகள் விமானத்தின் மூலம் நேற்று காலை 11.30 மணிக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இதையடுத்து விமானநிலைய குடியகல்வு குடிவரவு திணைக்கள அதிகாரிகள் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளும் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு படகு மூலம் புறப்பட்டு சென்ற விடயம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் சுமார் ஆறு மணி நேர வழக்கமான விசாரணைகளின் பின்னர் நேற்று மாலை 05.15 மணியளவில் விமான நிலையத்தில் இருந்து வெளியேறினர்.

முருகனின் வழக்கறிஞர் புகழேந்தி பாண்டியன் மூவருடன் இலங்கை பயணித்து அவர்களது குடும்பத்தினரிடம் அவர்களை கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முருகனின் தாயார் உள்ளிட்ட உறவினர்கள் மூவரையும் விமான நிலையத்தில் வரவேற்று தத்தமது சொந்த ஊர்களான பளை, கொக்குவில் நோக்கி புறப்பட்டுள்ளனர்.

வழியனுப்பி வைத்த நளினி, கயல்விழி சீமான்

முன்னதாக திருச்சி சிறப்பு முகாமில் இருந்து அழைத்து வரப்பட்ட மூவரையும் சென்னை விமான நிலைய பகுதியில் வைத்து முருகனின் மனைவி நளினி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாதளர் சீமானின் மனைவி கயல்விழி மற்றும் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரது உறவினர்கள் என பலரும் சந்தித்து வழியனுப்பி வைத்திருந்தனர்.

  • தமிழீழ அரசியல்துறை

    தமிழீழ அரசியல்துறை - Political wings of Tamileelam

    Related Posts

    “நினைவேந்தல் நிகழ்வு – 2026.01.18”

    தமிழீழ விடுதலைப் புலிகள் மகளிர் படையணியின் முதற் பெண் தளபதி மேஜர் சோதியா அவர்களின் 36ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 33ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன்

    Read more

    தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலை

    தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலையில் கல்வி கற்றுவரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களால் மிகவும் உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.  

    Read more

    Leave a Reply