சற்றுமுன்னர் தாயகம் வந்தடைந்த முருகன், ரொபேர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார்

செய்யாத குற்றத்திற்காக 33 ஆண்டுகள் சிறைவாசத்தை தகர்த்து தாயகம்  திரும்பும்   ராபர்ட் பயஸ், முருகன், ஜெயக்குமார்   மூவரும் இன்று   தமிழீழம் புறப்பட்டனர்.  கொழும்பை சென்றடையும் மூவரையும் அவர்களது உறவினர்கள் வரவேற்க காத்திருந்தனர் 

தற்போது   முருகன், ரொபேர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் சிறிலங்கா வந்தடைந்துள்ளனர்.

இவர்கள் மூவரும் இன்று(03)  தாய்நிலம் திரும்புவதற்கான  ஒழுங்குகளை    அவர்களின் சார்பில் வழக்குகளில் முன்னிலையான  தமிழ்நாடு சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் தெரிவித்திருந்தார்.

இவர்கள் திருச்சி சிறப்பு முகாமிலிருந்து   நேற்றிரவு 11.15 மணிக்கு சென்னைக்கு   தமிழ்நாடு காவல்துறை வாகனம் மூலம் அழைத்து வரப்பட்டனர்.

இன்று(03) முற்பகல் 10 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து  தாயகம்  நோக்கி பயணித்த இவர்கள் மூவரும் தற்போது 11.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.  

மேலும்   சிறிலங்கா செல்வதற்கு மாத்திரமே இந்தியாவிலுள்ள  சிறிலங்கா துணை உயர்ஸ்தானிகரகம் கடவுச்சீட்டு வழங்கியுள்ளதாகவும் சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  • தமிழீழ அரசியல்துறை

    தமிழீழ அரசியல்துறை - Political wings of Tamileelam

    Related Posts

    தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலை

    தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலையில் கல்வி கற்றுவரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களால் மிகவும் உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.  

    Read more

    Leave a Reply

    Discover more from தமிழீழ அரசியல்துறை

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading