2024.03.24 | தாயக அரசியல் நடுவம் அனுசரணையில் நடைபெற்ற “இளையோரின் விழிப்புணர்வுக்கான” மாபெரும் கபடிப் போட்டி.










தாயக அரசியல் நடுவத்தின் அனுசரணையில் மு/மாங்குளம் அம்பாள்புரம் பாடசாலை மைதானத்தில் 24.03.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று “இளையோரின் விழிப்புணர்வுக்காக” நடத்தப்பட்ட மாபெரும் கபடிப் போட்டியில், ஆண் / பெண் இருபாலின அணிகளும் பங்குபற்றியிருந்தனர்.
இப்போட்டிகள் காலை 9:00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மாலை 6:00 மணிக்கு நிறைவுபெற்றது. இதில் 6 ஆண்கள் அணிகளும், 2 பெண்கள் அணிகளும், சுமார் 300க்கு மேற்பட்ட பார்வையாளர்களும் கலந்துகொண்டனர் என்பது மிகவும் குறிப்பிடத்தக்க விடயமாகும். நிகழ்வில் பங்குபற்றிய அனைத்து வீரர்கள், சிறப்பு விருந்தினர்கள், மற்றும் நடுவர்களுக்குமான மதிநேர உணவுகளும்,, நிகழ்வைக் கண்டுகளிக்க வந்திருந்த அனைத்துப் பார்வையாளர்களுக்கு குளிர்பானங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
அன்றைய நாளில் சிறப்பு விருந்தினர்களாக..
முல்லைத்தீவு விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் திரு.இரத்தினராசா சகிதரசீலன் அவர்கள், முன்னை நாள் முல்லைத்தீவு விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் திரு.செ.தவராசா அவர்கள், உளவள ஆலோசகரும் / ஈழத்து எழுத்தாளருமான திரு.வவுனியூர் ரஜீவன் அவர்கள், மற்றும் மாங்குளம் காவல் நிலைய உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்ததோடு மட்டுமல்லாது, இளையோருக்கு விழிப்புணர்வு சார்ந்து விளக்கமளித்து உரையாற்றினார்கள்.
போட்டியில் பங்குபற்றிய அணிகள்:
1) பாலிநகர் மகா வித்தியாலய அணி – ஆண்கள்
2) பாலிநகர் மகா வித்தியாலய அணி – பெண்கள்
3) கொல்லவிளாங்குளம் உதய தாரகை அணி – ஆண்கள்
4) பாண்டியன்குளம் அணி – ஆண்கள்
5) வன்னிவிளாங்குளம் இராவணா விளையாட்டு அணி – ஆண்கள்
6) முத்தமிழன் A அணி – ஆண்கள்
7) முத்தமிழன் அணி – பெண்கள்
8) முத்தமிழன் B அணி – ஆண்கள்
போட்டியில் வெற்றி பெற்ற அணிகள்:
“முதலாம் இடம்” முத்தமிழன் A அணி (ஆண்கள்)
“இரண்டாம் இடம்” கொல்லவிளாங்குளம் உதயதாரகை அணி (ஆண்கள்)
“முதலாம் இடம்”
முத்தமிழன் அணி (பெண்கள்)
“இரண்டாம் இடம்” பாலிநகர் மகாவித்தியாலய அணி (பெண்கள்)
ஒருங்கிணைப்பு:
தாயக அரசியல் நடுவம்


































































































































































































