கண்ணீர் வணக்கம்
திருமதி. கலையமுது யோகரத்தினம்
10.07.1974 – 12.03.2024

தமிழ் மொழி பண்பாடு மரபுரிமை மேம்பாட்டுக் கூட்டணிப் பாடசாலைகளின் தமிழ் ஆசிரியராக இணைந்து பணியாற்றியவரும், தமிழ் மொழிமேல் அளவிலாப் பற்றுக்கொண்டு AD Tamil கலைக்குழுவில் ஆரம்ப காலம் தொட்டுச் செயலாற்றியவரும், எமது இளைய தலைமுறையினர் தமிழ் மொழியறிவில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காகக் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக தன்னலமற்று புலம்பெயர் மண்ணில் அயராது உழைத்தவருமாகிய ஆசிரியை திருமதி. கலையமுது யோகரத்தினம் அவர்களின் இழப்பானது எமது கல்விச் சமூகத்திற்குப் பேரிழப்பாகும்.
அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உற்றார்கள், உறவினர்கள், நண்பர்கள் அனைவரின் துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்வதுடன்,
“எழுத்தறிவித்தவன் இறைவனாகின்றான்”
எனும் கூற்றுக்கிணங்க அன்னாரின் ஆன்மாவும் இறைவன் திருநிழலில் அமைதி பெற வேண்டுகிறோம்.
தமிழ் கல்விக்கூடம் – எசெக்ஸ்
தமிழ் கல்விக்கூடம் – இல்ஃபேட்
கலைக்குழு – தமிழ் மொழி பண்பாடு மரபுரிமை மேம்பாட்டுக் கூட்டணி


















































































