தமிழீழ விடுதலை ஒர்மத்தொடு பயணிக்கும் ஈருருளிப் பயணம் ஜெனிவா எல்லையினை அண்மித்தது

தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டி 15.02.2024 பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப்பயணம் சுவிஸ் நாட்டினை வந்தடைந்து, மக்கள் பேரெழுச்சியோடு தொடர்ந்தும் பாசல்,சொலத்தூண், பேர்ண், பிறிபேர்க் ஊடாக பயணித்து, 02.03.2024 இல் லவுசாண் நகரில் நிறைவுற்றது.

03.03.2024 இன்று 18 வது நாளாக லவுசான் நகரில் அகவணக்கத்துடன் ஆரம்பித்த ஈருருளிப் பயணம், ஜெனீவா  நோக்கி மனிதநேய அர்ப்பணிப்போடு பயணித்து ஜெனிவா எல்லையினை சென்றடைந்தது.தொடர்ந்தும் ஜெனிவா ஐ.நா மனித உரிமைகள் பேரவை நோக்கி நீதிக்கான வேட்கையுடன் உறுதியுடன் கடந்து பயணிக்கின்றது. 

தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பயணிக்கும் ஈருருளிப் பயணம், நாளை மனித உரிமை பேரவை முன்பாக அமைந்துள்ள, முருகதாசன் திடலில் மாபெரும் நீதிக்கான மக்கள் போராட்டத்துடன் இணைந்து கொள்ளும்.

நாளை (04.03.2924) நடைபெறும் போராட்டத்தில் ஐரோப்பா வாழ் தமிழ்மக்களை  கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

  • தமிழீழ அரசியல்துறை

    தமிழீழ அரசியல்துறை - Political wings of Tamileelam

    Related Posts

    “நினைவேந்தல் நிகழ்வு – 2026.01.18”

    தமிழீழ விடுதலைப் புலிகள் மகளிர் படையணியின் முதற் பெண் தளபதி மேஜர் சோதியா அவர்களின் 36ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 33ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன்

    Read more

    தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலை

    தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலையில் கல்வி கற்றுவரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களால் மிகவும் உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.  

    Read more

    Leave a Reply