
சாந்தன் அவர்களின் இறுதிப் பயனம்!
சாந்தன் அவர்களின் உடல் இன்று (3-3-24) ஞாயிற்றுக்கிழமை தமிழீழ மக்கள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் தமிழீழத்தில் துக்கநாளாக அமைப்புக்களினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், காலை 8 மணிக்கு வவுனியாவில் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்,
பிறகு 9 மணியளவில் மாங்குளம் பகுதிக்கு வருகிறார்.
இதனைத் தொடர்ந்து காலை 10.30 மணிக்கு கிளிநொச்சியில் மக்கள் பார்வைக்கு பின் யாழ்ப்பாணத்திற்கு வருகிறார்.
யாழ்ப்பாணத்தில் கொடிகாமம் நெல்லியடி ஊடாக உடுப்பிட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு வல்வெட்டித்துறை_தீருவிலில் பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணிவரை மக்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது.
மாலை அவரது வீட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டு 04.03.20024 திங்கட்கிழமை எள்ளங்குளம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.


















































































