தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை அகற்றக்கோரி போராட்டம் நடத்தப்படுகிறது

2024.02.23 தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் பொதுமக்களால் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஒவ்வொரு பெளர்ணமி தினங்களிலும் நடைபெறும் சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம் இம்முறை  பிப்ரவரி 22   ஆம் திகதி 3.30 மணிக்கு ஆரம்பமாகி  போராட்டம்  நடைபெற்று வருகிறது 

வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் ,தனியார் காணிகளை அபகரித்து கட்டிய விகாரையை உடனே அகற்று , சட்டவிரோதமாக அமைத்த விகாரையை உடனே அகற்று  என்னும் கோசங்களுடன் பதாதைகளை ஏந்தியவாறு போராட்டம் இடம்பெறுகிறது.

தையிட்டியில் தொடரும் போராட்டம். தையிட்டியில் தமிழர்களின் காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள விகாரையைினை அகற்றுமாறு கோரி இரண்டாவது நாளாக இன்றும் போராட்டம் தொடர்கிறது. 

அபகரிக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர்.

தமிழீழ அரசியல்துறை

தமிழீழ அரசியல்துறை - Political wings of Tamileelam

Related Posts

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலை

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலையில் கல்வி கற்றுவரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களால் மிகவும் உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.  

Read more

Leave a Reply

Discover more from தமிழீழ அரசியல்துறை

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading