எதிர்வரும் 04.03.2024 அன்று ஜெனீவா ஐ நா முன்றலில் முன்னெடுக்கப்பட உள்ள மாபெரும் மக்கள் போராட்டத்திற்கான அரசியல் பரப்புரைக்குக் களமமைத்து 15/02/2024 அன்று பிரித்தானியாவில் இருந்து மிதியுந்துப் பயணப் போராட்டம் ஆரம்பித்து ஜெனீவா நோக்கி செல்லவுள்ளது. தேசபிமானம் கொண்டு நாம் அனைவரும் அணிதிரள்வோம்.
மனித உரிமைகள் ஆணையகத்தின் 55 ஆவது கூட்டத் தொடரினை முன்னிட்டு சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணைநடாத்த வேண்டியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதை வலியுறுத்தியும் பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கிய மிதியுந்துப்பயணம்!
-தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரித்தானியா


















































































